Advertisment

சாலை விபத்தில் வேளாண் கல்லூரி மாணவி உயிரிழப்பு!

Agricultural college student incident

Advertisment

சிதம்பரம் வண்டிகேட் புறவழிச்சாலையில் திங்கள் கிழமை மாலை அண்ணாமலைப்பல்கலைக்கழக வேளாண் துறையில் முதுகலை வேளாண்மை பயின்றுவரும் காட்டுமன்னார்குடி பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி (22 ) உடன் பயிலும் குளித்தலை பகுதியை சேர்ந்த பூர்ணிமா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அப்பொழுது பின்னால் வந்த லாரி இவர்களது இருசக்கரவாகனத்தில்திடீரெனமோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிவரஞ்சனி மற்றும் பூர்னிமா படுகாயங்களுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் காட்டுமன்னார்குடி பகுதியை சேர்ந்த மாணவி சிவரஞ்சனி இறந்துவிட்டார். பூர்ணிமா மருத்துவமனை சிகிச்சைபெற்று வருகிறார். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.

police College students accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe