
திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கேரள மாநிலத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். நேற்று (05.10.2021) அவரது குடும்பத்தினர் அவருடைய உடலை தகனம் செய்ய இடுகாட்டிற்கு கொண்டுவந்தனர். அப்போது அரியமங்கலம் இடுகாட்டில் வழிபாடு செய்து பிரதிஷ்டை செய்யும் அகோரி மணிகண்டன் மற்றும் அவர்ரது பக்தர்கள் உடல் முழுவதும் திருநீறு அணிந்து இடுகாட்டில் இருந்தனர். உறவினர்கள் இறுதிச்சடங்கை முடித்த பின்பு, மணிகண்டன் உள்ளிட்டவர்கள் சடலத்தின் முன் ஆசனம் செய்தும், சடலத்தைச் சுற்றி நின்றவாறும்மந்திரங்களை ஓதி பூஜை செய்துள்ளனர். வெங்கடேசன், அகோரி மணிகண்டனுக்கு சிஷ்யராக இருந்ததால் அவருடைய ஆத்மா சாந்தி அடைய இந்த சிறப்பு பூஜை நடைபெற்றதாக கூறியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)