Advertisment

‘அக்னிபாத்’ இரயில் மறியலுக்கு முயற்சித்த இளைஞர்கள்! 

 'Agnipath' issue Youths who tried to block the train!

அக்னிபாத்திட்டத்தைகைவிடக்கோரி திருச்சிஜங்சன்ரயில் நிலையம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாகமாவட்டச்செயலாளர் லெனின் மற்றும் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

அதனைத் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது, “இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில்வீரர்களைச்சேர்க்கும்அக்னிபாத்திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்.இதைக்கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இது இளைஞர்களின்எதிர்காலத்தைப்பாதிக்கும் திட்டமாகவும் செயல்பட்டு வருகின்றது. இதுபோன்ற நிலை உருவானால், ராணுவத்தின் புனிதம் கெட்டுவிடும். ஆகவேஅக்னிபாத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போதுகண்டோன்மெண்ட்உதவி ஆணையர்அஜய்தங்கம் தலைமையிலானபோலீசார்போராட்டக்காரர்களைத்தடுத்து நிறுத்தி ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். பின்னர் அவர்களுக்கும்போலீசாருக்கும்இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும்மேலாகத்திருச்சி ரயில் நிலையம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Agnipath trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe