/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a330.jpg)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள ஆலங்காடு பகுதி சேர்ந்தவர் அக்னி ராஜ். மைனர் மணி என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒன்பதாவது குற்றவாளியாக அக்னி ராஜ் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் சிறையில் இருந்த அக்னி ராஜ் அந்த கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்த போது அதே 2021 ஆம் ஆண்டு மைனர் மணியின் ஆதரவாளர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தில் அக்னிராஜின் கொலையை டுத்து 'அக்னி பிரதர்ஸ்' என்ற வாட்சப் குழுவை தொடங்கிய அவரது ஆதரவாளர்கள் அக்னி ராஜின் கொலைக்கு காரணமான நபர்களாக கருதப்படுபவர்களைகொலை செய்துவருகின்றனர். பரமசிவன், அழகு பாண்டி, ஆகாஷ் ஆகியவர்களை அடுத்தடுத்து கொலை செய்து அவர்களுடைய தலையை சிதைத்து சித்திரவதை செய்திருந்தனர். இந்நிலையில் அதே கும்பல் வினோத் கண்ணன் என்பவரையும் கொலை செய்துள்ளது.
வினோத் கண்ணன் கொலை செய்யப்பட்ட பிறகு 'அக்னி பிரதர்ஸ்' சமூகவலை பக்கத்தில் 'நான்கு முடிந்து விட்டது' என பதிவிட்டுள்ளதோடு கொலை செய்யப்பட்ட வினோத் கண்ணனின் புகைப்படத்தை வெளியிட்டு 'மீண்டும் தொடரும்' என பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர் விசாரணை அடிப்படையில் ராயர்பாளையத்தில் வைத்து காளீஸ்வரன், பிரபுதேவா, சாமிநாதன், நிதிஷ் குமார் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பிரபுதேவாவும், சாமிநாதனும் கொலை செய்யப்பட்ட வினோத் கண்ணின் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)