
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி அலுவலகத்திற்கு நிர்வாண அகோரிகள் வரவழைக்கப்பட்டு ஆண் ஊழியர்கள் ஆசி பெற்றது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் ஆண்கள், பெண்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பணி நாளில் இரண்டு அகோரிகள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்கள். நிர்வாணமாக வந்த அகோரிகளைக் கண்ட பெண்கள் ஓட்டம் பிடித்து அலுவலகத்தின் மாடிப் பகுதியிலிருந்த அலுவலக அறையில் ஒன்று கூடினர். இந்த சாமியார்கள் ஒன்றும் எதேச்சையாக வரவில்லை;வரவழைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

காசியிலிருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த காசி ஸ்ரீ சீனு அகோரி சாமிகளை நகராட்சி ஆணையரின் நண்பரின் உதவியுடன் அலுவலகத்திற்கு கூட்டி வந்தனர். ஆணையரின் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்ட நிர்வாண அகோரிகளிடம் ஆண் ஊழியர்கள் ஆசி பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆடை இல்லாமல் நிர்வாணமாக வந்த அகோரிகளை அரசு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று ஆசீர்வாதம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)