Advertisment

கிணற்றில் விழுந்த காட்டெருமை; போராடி மீட்ட வனத்துறை!

An aggressive bison fell into a well; The forest department fought and saved

திருச்சியில் வனத்தை ஒட்டியுள்ள பகுதியிலிருந்து விளைநிலப் பகுதிக்கு வந்த காட்டெருமை அங்கிருந்த நீர்ப்பாசனக் கிணற்றில் தவறி விழுந்த நிலையில்அதனை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

Advertisment

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ளது செம்மலைப் பகுதி. வனத்தை ஒட்டிய பகுதி என்பதால் அடிக்கடி காட்டு விலங்குகள் அந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குப் படை எடுப்பது வழக்கம். இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து வினோத சத்தம் கேட்டதை தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் எட்டிப் பார்த்தனர். உள்ளே காட்டெருமை ஒன்று தவறி கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

Advertisment

உடனடியாக வனத்துறையினருக்குத்தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அதை மீட்க முயன்றனர். ஆனால் காட்டெருமை மிகவும் ஆக்ரோசமாக இருந்ததால் மயக்க மருந்து செலுத்தி அதனை வெளியே கொண்டு வர வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி காட்டெருமைக்கு மயக்க ஊசி துப்பாக்கி மூலம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கயிறு கட்டி காட்டெருமை பத்திரமாகமீட்கப்பட்டது. மேலே கொண்டுவரப்பட்ட காட்டெருமைக்கு மீண்டும் மயக்கத்தன்மையைப் போக்க வைக்கும் ஊசி செலுத்தப்பட்ட நிலையில் மயக்கம் தெளிந்து மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது.

manapparai thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe