Aggravated Incident; Chinnasalem incident suspect arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கும் பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நிர்மலாவிற்கும் கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு திருமணமான நிலையில் அவர்களுக்கு கனிஷ்கா என்ற 6 வயது பெண்குழந்தையும் ஹரிணி என்கிற 4 வயது பெண்குழந்தையும் உள்ளனர்.

Advertisment

கணவர் செந்தில் நெல் அறுக்கும் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார். இந்நிலையில் நிர்மலா தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று மாலை நாகுகுப்பம் தெற்கு மேடு பகுதியில் இருக்கும் பால் சேகரிக்கும் நிலையத்தில் பாலை ஊற்றி விட்டு வீட்டிற்குத் திரும்பியவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

Advertisment

இதனால் சந்தேகமடைந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர். இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் நிர்மலாவை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. மேலும் அவரது தம்பி மணிவண்ணன் வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வீட்டிற்கு அருகே உள்ள சோளக்காட்டில் அவர் பால் ஊற்றி வந்த பால் கேன்கள் மற்றும் காய்கறிகள் துப்பட்டா சிதறிக் கிடந்ததும் தெரியவந்தது.

Aggravated Incident; Chinnasalem incident suspect arrested

அதிலிருந்து சற்று தூரத்தில் தனது அக்கா நிர்மலா இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுது கத்திக் கூச்சலிட்டார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பெயரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குமரேசன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சின்னசேலம் நைனார்பாளையம் பகுதியில் டீக்கடையில் வேலை செய்து வந்த குமரேசன் சம்பவத்தின் போது காட்டுவழி பகுதியில் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது பால் ஊற்றுவதற்காகவந்தநிர்மலாவை அடித்து சோளக்காட்டு பகுதி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மயக்கமான நிலையில் இருந்த நிர்மலா தனக்கு நடந்த கொடூரத்தை வெளியே சொல்லி விடுவார் என்ற பயத்தில் கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மேலாக இந்த கொலை சம்பவத்தில் யார் குற்றவாளி என தெரியாமல் இருந்த நிலையில் தற்போது போலீசார் ஒரு நபரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.