நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா அகரம் எனும் அறக்கட்டளையை நிறுவி பல்வேறு கல்வி உதவிகளை செய்து வருகிறார். பல்வேறு தரப்பிலிருந்து நன்கொடைகளும் பெறப்பட்டு கல்வி உதவியானது அகரம் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகரம் அறக்கட்டளையின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அகரம் அறக்கட்டளையின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் ஹேக்கிங் பிரச்சனைகளை சரி செய்யும் வரை யாரும் நன்கொடைகள் அளிக்க வேண்டாம். அதேபோல் யாரேனும் தொடர்பு கொண்டால் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.