'இது இயற்கை நீதிக்கு விரோதமானது' -ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பதில்   

 'This is against natural justice' - MLA KK Selvam's reply to DMK leader Stalin

தி.மு.க. தலைமை மீது ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.கு.க. செல்வம்அண்மையில்டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்துபேசினார்.

அதனையடுத்துதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் அவசர ஆலோனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு, ''தி.மு.க தலைமை நிலைய அலுவலகசெயலாளர் மற்றும் தலைமைசெயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் (05.08.2020) விடுவிக்கப்படுகிறார்'' என தி.மு.க. தலைமை அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” எனஅதில்கூறப்பட்டது.

இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் தற்பொழுது பதில் கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அதில், சஸ்பெண்டை வாபஸ் பெறுங்கள். இயற்கை நீதிக்கு விரோதமானது என்பதால் என்னை சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள். பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடி கலைஞரை நேரில் சந்தித்து அனைவருக்கும் தெரியும்.கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல.நான் பொய்யாக, அவதூறாக என்ன சொன்னேன் என நோட்டீஸ் கடிதத்தில் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

MLA stalin
இதையும் படியுங்கள்
Subscribe