கலைஞருக்கு மருத்துவ உதவிகள் அளிக்க தயார்! - எடப்பாடி பழனிச்சாமி

eps

திமுக தலைவர் கலைஞருக்கு நேற்று நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,

’’திமுக தலைவர் கலைஞர் நலமடைந்து வருகிறார். ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞருக்கு அரசு சார்பில் மருத்துவ உதவிகள் அளிக்க தயார். அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால் மருத்துவ உதவிகள் அளிக்கத் தயார்’’ என்று தெரிவித்தார்.

eps klaignar
இதையும் படியுங்கள்
Subscribe