admk

அண்மையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்திருந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகியான தளவாய் சுந்தரம் அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் அதிமுக தலைமை பொறுப்பு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு தற்பொழுது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட காரணத்தால் அது சம்பந்தமாக உரிய விளக்கம் கேட்டு கடந்த 8/10/2024 அன்று அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டிருந்தார். அவர் அந்நிகழ்வில் கலந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலும் அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.