Advertisment

மீண்டும் ஓ.பி.எஸ். அணிக்கு திரும்பிய மைத்ரேயன்! 

Again OPS. MAITREYAN returned to the team!

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (08/10/2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர் மைத்ரேயன் மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 1,000- க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். மைத்ரேயன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

Advertisment

நிகழ்ச்சியில் பேசிய மைத்ரேயன், "அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும் தான் உள்ளது. எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் அழைத்து என்னை நலம் விசாரித்தார். மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு திரும்பியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், புகழேந்தி, ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர்.

admk Leader
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe