Again the female corpse in the suitcase;  Police investigation

Advertisment

சென்னையில் அண்மையில் துறைப்பாக்கம் மேட்டுக்குப்பம் அருகே உள்ள குமரன் குடில் பகுதியில் சாலை ஓரத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் பெண் சடலம் கைப்பற்றப்பட்ட இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பாலியல் தொழிலாளியான இளம்பெண்ணை மணிகண்டன் என்பவர் வரவழைத்துள்ளார். தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு அதற்கான பணத்தை கேட்ட போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் பெண்ணை கொலை செய்து சூட்கேஸில் போட்டு சாலையில் வீசி சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் சேலத்திலும்இதேபோல் சூட்கேஸில்இளம்பெண் சடலம் கேட்பாரற்று சாலை ஓரப்பகுதியில் வீசப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள ஆவாரம்பாளையம் கிராமத்தில் பாலத்திற்கு அடியில் கருப்பு நிற பெரிய ட்ராலி சூட்கேஸ் ஒன்று வீசப்பட்டு கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. கைது கைப்பற்றப்பட்ட பெண்ணுக்கு 20 முதல் 30 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பெண் யார், யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.