Again the dog bites and injures the boys; Again excitement in Chennai

அண்மையில் சென்னையில் பூங்கா ஒன்றில்சிறுமி ஒருவரை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் சென்னை கே.கே நகர் பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவனை ஓட ஓட விரட்டி நாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கேகே நகரில் நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவன் ஒருவனை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று ஓட ஓட விரட்டி கடித்தது. இதில் காயமடைந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நாய் கடித்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இதேபோல் சென்னை கொளத்தூர் பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய பாட்டிக்கு உணவு கொடுப்பதற்காக சென்ற பொழுது அவர் வசித்து வந்த பகுதிக்கு அருகே உள்ள வீடு ஒன்றில் ஐந்து வளர்ப்பு நாய்கள் இருந்துள்ளது. அந்த வளர்ப்பு நாய்கள் அச்சிறுவனை கடித்துக் குதறியது. இதில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இப்படி சென்னையில் இரு வேறுபட்ட இடங்களில் மீண்டும் நாய்கள் கடித்து சிறுவர்கள் காயமடைந்திருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment