
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த செவிடந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவருடைய மகள் சசிகலா பூட்டுத்தாக்கும் மாங்குப்பம் கிராமத்தில் ராணுவ வீரர் உதயன் என்பவருடன் திருமணம் ஆகி 11 ஆண்டுகள் தன் மாமியார் மாமனார் உடன் வசித்து வந்தார். இவருக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுடைய மாமனார் மனோகரன் மாமியார் வேண்டா இருவரும் மருமகள் சசிகலாவை பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி துன்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே சசிகலாவுடைய கணவர் உதயன் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதால் குடும்பத்தை கவனிக்காமல் வீட்டு செலவுக்கு பணம் தராமல், அவரும் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சசிகலா கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளைத் தவிக்கவிட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது