கடந்து சில நாட்களுக்கு முன்பு வடிவேலு ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த நேசமணி காண்ட்ராக்டர் கேரக்டர் காமெடி உலக அளவில் ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது மூன்றெழுத்து வசனம் அதிக அளவில் டிரெண்டாகி வருகிறது. ரவிச்சந்திரன் , ஜெயலலிதா நடிப்பில் வெளியாகிய திரைப்படமான மூன்றேழுத்து என்ற படத்தில்தான் மேற்படி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ஒரு காட்சியில் அனைவருமே மூன்றெழுத்து மூன்றேழுத்து என்று பேசி வருவது போன்ற காட்சி உள்ளது. ரவிச்சந்திரன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், அசோகன் உள்ளிட்ட அனைவருமே அப்படி ஒரு காட்சியில் தொடர்ந்து மூன்று எழுத்து சம்மந்தப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருவதால் இந்த படத்தின் வசனம் வைரலாக பரவி வருகிறது.

Advertisment