நடந்து முடிந்த 17- வது மக்களவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். தமிழ்நாட்டில் தி.மு.க- காங்கிரஸ் கட்சிகூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைமைகளும் தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்யப்படும் என்றுஅறிவித்து வருகின்றனர். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினரும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்வதுடன் நன்றி நோட்டீசும் வழங்கி வருகின்றனர். அந்த நோட்டீசில்.. தொலைக்காட்சி பிரச்சாரங்கள் ஏதுமின்றி சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு 72 ஆயிரத்தில் 240 வாக்குகளையும், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் 10 ஆயிரத்தில் 250 வாக்குகளும், ஒரு காசு வாங்காமல் வாக்களித்த வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

Advertisment

naam tamilar party

அதிலும் வடகாடு கிராமத்தில் மட்டும் சுமார் 800 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கிறது. பணம் வாங்காமல் ஜனநாயக கடமையை செய்த வாக்காளர்களை தலைவணங்கி அவர்களுக்கு நன்றி சொல்கிறோம். இனி வரும் தேர்தல்களிலும் இதே போல அனைத்து வாக்காளர்களும் பணம் வாங்காமல் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது எங்கள் கட்சி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். காசுக்கு விலை போகாத மானத் தமிழ் உறவுகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறோம் என்றனர் நோட்டீஸ் கொடுத்த நாம் தமிழர் கட்சியினர்.