Skip to main content

போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சவுக்கு சங்கர் சிறையில் அடைப்பு

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
After the end of the police custody, savukku Shankar was remanded in jail

பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தேனியில்  காரில் 409 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உட்பட மூவர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து அவரது உதவி யாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்க தேனி போலீசார் கடந்த 20 ஆம் தேதி கோவை சிறையில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வந்து மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவுப்படி 2 நாள் காவலில் எடுத்த தேனி போலீசார் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வைத்து இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். தேனி மாவட்ட கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்தன், சுகுமாரன் தலைமையில் தேனி காவல் ஆய்வாளர் உதயகுமாரின் விசாரணைக்கு பின் போலிசாரின் தகுந்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் மீண்டும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்பபட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தற்போது நேற்று பழனிசெட்டிபட்டியில் இருந்து சவுக்கு சங்கரை தேனி போலீசார் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

சார்ந்த செய்திகள்