Advertisment

26 வயது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை; 56 வயது கணவன் கைது

After the disappearance of the wife, the husband confessed that I was the reason

Advertisment

26 வயது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக 56 வயது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் வனராஜ். 50 வயதான இவரின் முதல் மனைவி இறந்துவிட்டார். முதல் மனைவிக்கும் வனராஜுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வனராஜ் இரண்டாவதாக 26 வயதான உமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். வனராஜ் தனது குடும்பத்துடன் ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து அதன் காவலாளியாகப்பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்குமுன்புஉமா மர்மமான முறையில் இறந்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் வனராஜ் காவல்துறையினரிடம், “இரவில் நானும் உமாவும் மது குடித்தோம். மதுபோதையில் எனது கையில் டார்ச் லைட்டை வைத்து எனது மனைவியின் அடிவயிற்றில் அழுத்தினேன். இதனால் அவர் காயமடைந்தார். அதன் காரணமாக அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர் வலியால் அலறினார். ஆனால் நான் அதைப் பொருட்படுத்தாமல் தூங்கிவிட்டேன்.மறுநாள் அவர் இறந்து கிடந்ததைப் பார்த்த நான் அதிர்ச்சி அடைந்தேன்” என்று கூறியுள்ளார்.

Advertisment

இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்த காவல்துறையினர், இதனைத் தொடர்ந்து மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வனராஜை கைது செய்தனர்.

police Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe