Skip to main content

26 வயது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை; 56 வயது கணவன் கைது

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

After the disappearance of the wife, the husband confessed that I was the reason

 

26 வயது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக 56 வயது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் வனராஜ். 50 வயதான இவரின் முதல் மனைவி இறந்துவிட்டார். முதல் மனைவிக்கும் வனராஜுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வனராஜ் இரண்டாவதாக 26 வயதான உமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். வனராஜ் தனது குடும்பத்துடன் ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து அதன் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார்.

 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு உமா மர்மமான முறையில் இறந்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் வனராஜ் காவல்துறையினரிடம், “இரவில் நானும் உமாவும் மது குடித்தோம். மதுபோதையில் எனது கையில் டார்ச் லைட்டை வைத்து எனது மனைவியின் அடிவயிற்றில் அழுத்தினேன். இதனால் அவர் காயமடைந்தார். அதன் காரணமாக அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர் வலியால் அலறினார். ஆனால் நான் அதைப் பொருட்படுத்தாமல் தூங்கிவிட்டேன். மறுநாள் அவர் இறந்து கிடந்ததைப் பார்த்த நான் அதிர்ச்சி அடைந்தேன்” என்று கூறியுள்ளார்.

 

இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்த காவல்துறையினர், இதனைத் தொடர்ந்து மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வனராஜை கைது செய்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கஞ்சா விற்ற இளைஞர் கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Youth arrested for selling cannabis

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு, கருங்கல்பாளையம் எம்ஜிஆர் நகர் சமுதாய கூடம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனையில் பாசில் என்கிற பப்பாளி (27) என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

கள்ளச்சாராய எதிரொலி; ஈரோட்டில் பெண் உள்பட 15 பேர் கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
counterfeit liquor echo; 15 people, including a woman, were arrested in Erode

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட பவானி கூடுதுறை மெயின்ரோடு பூபதி(40), ஈரோடு அசோகபுரம் ராமநாதன்(36), பூதப்பாடி ரமேஷ்(41), வெள்ளாங்கோவில் சுதாகர்(43), வெள்ளாபாளையம் கோபாலகிருஷ்ணன்(41) புளியம்பட்டி செந்தில்(43), கொண்டையம்பாளையம் சுமந்த்(33), கோபி கணக்கம்பாளையம், நடராஜ் மனைவி பொன்னுதாய்(59) உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக எந்தெந்த கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The website encountered an unexpected error. Please try again later.