கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் உள்ள "அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்" (Azim Premji University) வேலை வாய்ப்புகள் குறித்த சர்வேயை வெளியிட்டது. இதில் கடந்த இரண்டு வருடங்களில் 50 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அரசு அறிவித்துள்ள அறிக்கையில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-2018 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதே போல் பிரதமர் நரேந்திரமோடி இரவு நேரத்தில் அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளதாகவும் , உயர்கல்வி பயின்ற இளைஞர்களும் தற்போது வேலை வாய்ப்பின்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்த சர்வேயை பல்வேறு பத்திரிக்கைகளிலும் ஏற்கெனவே வெளியாகியுள்ளது . எனவே அனைத்து தரப்பினரும் கூறும் ஒரே தகவல் என்னவென்றால் பண மதிப்பிழப்பால் கருப்பு பணம் கட்டுப்படுத்தப்பட்டதா ? மற்றும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டதா? என அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஆண்டு தோறும் குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு அமைதியாக ஆட்சியை ஐந்து ஆண்டுகள் நகர்த்தியுள்ளது. அதைத் தொடர்ந்து இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் பிரதமர் எடுக்கவில்லை என அனைவரும் குற்றம் சாட்டியுள்ளனர். இனி வருங்காலத்தில் இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர். இந்தியாவில் இளைஞர்களுக்கு தரமான கல்வி உள்ளது. ஆனால் வேலை வாய்ப்புகள் மட்டுமே இல்லை என்பது அனைவரும் அறிந்தது ஆகும்.
பி.சந்தோஷ், சேலம்.