Skip to main content

பணமதிப்பிழப்புக்கு பிறகு சுமார் 50 லட்சம் இளைஞர்கள் வேலையிழப்பு!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் உள்ள "அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்" (Azim Premji University) வேலை வாய்ப்புகள் குறித்த சர்வேயை வெளியிட்டது. இதில் கடந்த இரண்டு வருடங்களில் 50 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அரசு அறிவித்துள்ள அறிக்கையில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-2018 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதே போல் பிரதமர் நரேந்திரமோடி இரவு நேரத்தில் அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை  காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளதாகவும் , உயர்கல்வி பயின்ற இளைஞர்களும் தற்போது வேலை வாய்ப்பின்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 
 

job loss



இந்த சர்வேயை பல்வேறு பத்திரிக்கைகளிலும் ஏற்கெனவே வெளியாகியுள்ளது . எனவே அனைத்து தரப்பினரும் கூறும் ஒரே தகவல் என்னவென்றால் பண மதிப்பிழப்பால் கருப்பு பணம் கட்டுப்படுத்தப்பட்டதா ? மற்றும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டதா? என அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஆண்டு தோறும் குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு அமைதியாக ஆட்சியை ஐந்து ஆண்டுகள் நகர்த்தியுள்ளது. அதைத் தொடர்ந்து இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் பிரதமர் எடுக்கவில்லை என அனைவரும் குற்றம் சாட்டியுள்ளனர். இனி வருங்காலத்தில் இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர். இந்தியாவில் இளைஞர்களுக்கு தரமான கல்வி உள்ளது. ஆனால் வேலை வாய்ப்புகள் மட்டுமே இல்லை என்பது அனைவரும் அறிந்தது ஆகும்.


பி.சந்தோஷ், சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

சென்னையில் பிரதமரின் வாகனப் பேரணி - ஏற்பாடுகள் தீவிரம்! (படங்கள்)

Published on 09/04/2024 | Edited on 09/04/2024

 

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகள், தேதி நெருங்கி விட்டதால் பிரச்சாரத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இன்று மாலை சென்னை வரும் பிரதமர், தியாகராயர் நகரில் பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார். அதைமுன்னிட்டு அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்