Advertisment

நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு காட்டமாக வெளியேறிய அமைச்சர் மா.சு

 After canceling the program, the minister left the stage

Advertisment

தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. இதுதொடர்பாக சென்னை எழும்பூர் மருத்துவமனையில் செவிலியர்களுக்கான காய்ச்சல் பயிற்சி முகாம் இன்று நடைபெற இருந்தது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் என மொத்தம் 1000 பேர் கலந்துகொள்வர் என கூறப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில்தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கை 50 எனும் அளவிற்குகுறைவாக இருந்ததால் அதிருப்தியிலிருந்த அமைச்சர் மா.சு திடீரென நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கோபமாக கிளம்பினார். அடுத்த முறை சரியாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தால் மட்டுமே கலந்துகொள்வேன் என்று காட்டமாக அதிகாரிகளிடம் சொல்விட்டு அமைச்சர் அங்கிருந்து கிளம்பினார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe