After attacking the police and fleeing, the rioter 'tied dough' to the bottle bell

குடிபோதையில் காவலர்களை தாக்கிய பாட்டில் மணி என்ற ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஜே.ஜே.நகரில் ரவுண்ட் பில்டிங் அருகே நேற்று முந்தினம்இரவு மதுபோதையில் இரண்டு ரவுடிகள் ரகளை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு சென்றரோந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற நிலையில், ரோந்து வாகனத்தின் மீது ரவுடிகள் இரண்டு பேரும் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

Advertisment

இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவலர்கள் நந்தகோபால் மற்றும் ராயப்பன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்குச் சென்று ரவுடிகளை பிடிக்க முயன்றுள்ளனர். அப்பொழுது ரவுடி பாட்டில்மணி கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து தாக்கியதில் இரண்டு காவலர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் காவலர்களை தாக்கிய பாட்டில்மணி பொதுமக்கள் உதவியுடன் கைது செய்யப்பட்ட நிலையில், ரகளையில் ஈடுபட்ட மற்றொரு ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மது பாட்டிலால் தாக்கப்பட்டு காயமடைந்த காவலர்களை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து உடல்நலம்குறித்துகேட்டறிந்தார். இந்நிலையில்தப்பி ஓட முயன்ற பாட்டில் மணியின் கால் உடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவனுக்கு காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

Advertisment