/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/109_16.jpg)
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
எதிர் கட்சித்தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்விற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மின்கட்டண உயர்விற்கு திமுக பொறுப்பில்லை என சொல்லுகின்றனர். எனில் ஜப்பான் அரசு இல்லை எனில் ஆப்கானிஸ்தான் அரசுபொறுப்பா? மின் கட்டணத்தை ஏற்றியது தமிழக அரசு. மக்கள் எல்லாம் சிந்திக்க தெரியாதவர்கள் என நினைத்தால் இவர்களை விட அறிவிலிகள் இல்லை. மின் கட்டணம் மற்ற மாநிலத்தை விட தமிழகத்தில் குறைவு என சொல்லுவார்கள். அதிமுக ஆட்சியில் தான் அதிக அளவு ஏற்றப்பட்டது எனவும் சொல்லுகின்றனர். மக்களுக்கு சரியாக இந்த திமுக அரசு செய்கிறதா இல்லையா என தெரியும்” என கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)