Advertisment

"இந்த நாட்டில் வாழ விரும்பவில்லை” - முதல்வர் தனிப்பிரிவில் புகார் (படங்கள்)

Advertisment

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியில் வசந்தம் ஹவுசிங் பில்டர்ஸ் சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டில் ரூ. 25,000 முதலீட்டில் சொந்தவீடு மற்றும்PMAY திட்டத்தின் கீழ் மூன்று லட்ச ரூபாய் வரை மானியம் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் சுமார் 80 வீடுகள் கட்டப்பட்டன. அவர்கள் கட்டிய அனைத்து வீடுகளும் தரமற்றதாக இருக்கின்றன. மேலும், அந்தக் கட்டடத்தில் கை வைத்தால் இடியும் தறுவாயில் உள்ளது. இது குறித்து அரசு அதிகாரிகளைச் சந்தித்துப் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும்எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை, அரசு அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்து வருகிறார்கள். எனவே,இந்த நாட்டின் பிரஜைகளாக வாழ விரும்பவில்லை என ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைப்பு போராட்டம் நடத்தப்போவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe