Advertisment

கரோனா நோய்த் தொற்று காரணத்தால்,தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் மூடுவதற்குஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அனைத்து வழக்குகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. கரோனா தாக்கம் கட்டுக்குள் வந்ததையடுத்து அரசும் படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. இருந்த போதிலும், கரோனா நோய்த் தொற்றால் மூடப்பட்ட வழக்கறிஞர்கள் சட்ட அறை திறக்கப்படாமலேயே நீதிமன்றம் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் சட்ட அறைகளை திறக்கக் கோரியும், சுகாதாரத்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்தும்சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலகமுற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.