Skip to main content

‘இதோ, இந்த ராஜேஸ்வரி தோளில்தான் ஈசனும், யேசுவும், அல்லாவும்..’ - காவலருக்கு ஒரு வழக்கறிஞரின் வாழ்த்து! 

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Advocate V Balu written poem to PT Chatram Inspector Rajeswari

 

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாடின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதில், சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் சாய்ந்த மரங்களை அக்கல்லறையில் பணி செய்யும் ஊழியரான உதயகுமார் என்பவர் அப்புறப்படுத்தும் பணியில் இருந்தபோது, அங்கு அவர் மயங்கி விழுந்தார். இதுகுறித்தத் தகவல் டி.பி.சத்திர காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அங்கு விரைந்து சென்று அவரை தன் தோளில் தூக்கி சுமந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்த இருவரை அவருடன் அனுப்பிவைத்தார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்திருந்தனர். அது சமுகவலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து இன்று (12.11.2021) காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழையும் அளித்தார். 

 

Advocate V Balu written poem to PT Chatram Inspector Rajeswari
                                                வழக்கறிஞர் வே.பாலு

 

இந்நிலையில் வழக்கறிஞர் வே.பாலு, அந்த ஆய்வாளரின் செயலைப் பாராட்டி ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதை பின்வருமாறு.

 

யாரம்மா நீ?
விழி பிதுங்கி,
நுரைதள்ளி,
மொத்தக்கண்ணீரும்
மழை நீரோடு கலக்க


ஒரே ஒரு செயல்..
கடமை கடந்து,
கருப்பை சுமப்பவள்
நீ .. என்பதை
மரணம் தொட்ட
மனிதனை
அன்னையாய் சுமந்த
உன் தோளுக்குள்
அத்தனை தீரமா?
இல்லை அம்மா,
மழை நீரையும்
மிஞ்சிய ஈரம்!!!


உன்னைச்சுற்றி
அத்தனை ஆண்கள்...
அதனாலென்ன?
யாரோ பெற்ற பிள்ளை
என நீ எண்ணாமல்,
உன் பிள்ளை போலசுமந்து நடந்த
அழகு.. சோகத்தில் 
ஒரு சுகம்...


ஒருவேளை உன் போன்றோரை
ஊரறியச் செய்யவே
இயற்கை
இப்படியும் வாட்டுமோ?


அதிலும்
வண்டியில் ஏற்றும் வரை
நீ காட்டிய நிதானம்..
ஏற்றிய பின் சொல்லும்
ஒற்றை வார்த்தை..
'போ சீக்கிரம் போ. எப்படியாவது காப்பாற்று'
அம்மாக்களுக்கு மட்டுமே
அமைவது!



அவனைப்பெற்ற அம்மா
பார்த்தால்,
அவள் கருப்பை
உன் கால் தொழும்!!



காவல்துறைக்குள்
இன்னமும் இப்படி
சில கருணை இதயங்கள் இருப்பதால்தான்..
சிலவேளை
கைகூப்பித் தொழுகிறோம்.
நீங்களெல்லம்
இருப்பதால்தான்
நாங்களும் 'இருக்கிறோம்'



உனது செயல் கண்டோ நாணிக்
கடந்தது மழை?
யார் கடவுள்?
இதோ இந்த
ராஜேஸ்வரி தோளில்தான்
ஈசனும், யேசுவும், அல்லாவும்.....



- வழக்கறிஞர் வே. பாலு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் மழை

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

Rain at chennai
கோப்புப் படம் 

 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டுவந்த நிலையில், காலை 8.45 மணி முதல் மிதமான மழை பெய்துவருகிறது. 

 

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி மற்றும் அதனை தாண்டியும் வெயில் கொளுத்திவந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் இருந்து திடீரென மழை பெய்ய துவங்கியுள்ளது. வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 

Next Story

சென்னையில் கொட்டி தீர்த்த மழை 

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

Heavy rain in Chennai
கோப்புப் படம் 

 

 

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

 

இதன்படி, சென்னையில் நேற்று பகலில் மிதமான மழை பெய்த நிலையில், இரவு நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. திருவொற்றியூர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. வடசென்னையிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 

 

சென்னையில் சாந்தோம், இராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்க்கம், சூளைமேடு, வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்தது. பின் நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. 

 

வரும் 4ம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.