Advertisment

தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராவது...

court

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராவது குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

தடை செய்யப்பட்ட சிபிஐ-மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு நிதி உதவி செய்ததாக வழக்கறிஞர் முருகன் என்பவர் மீது தர்மபுரி கியூ பிரிவு பிரிவினர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆரம்பத்தில் முதல் தகவல் அறிக்கையில் முருகனின் பெயர் இல்லாத நிலையில், தற்போது உள்நோக்கத்துடன் அவரது பெயரை சேர்த்துள்ளதாகவும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆதாரங்களும் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு ஆதரவாக முருகன் நீதிமன்றத்தில் ஆஜராவதை தடுக்கவே காவல்துறையினர் இந்த பொய் வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த க்யூ பிரிவு காவல்துறை தரப்பு, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் முருகனும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சீனிவாசனும் சந்தித்து பேசியுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சீனிவாசன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்களிடமிருந்து மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.வி.முரளிதரன், மாவோயிஸ்ட் இயக்கத்தினர்களுக்காக வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராவது குற்றமல்ல என தெரிவித்தார். மேலும், முருகன் மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு நிதி உதவி செய்துள்ளார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி, அவரை விடுவிக்க மறுத்து தர்மபுரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

court Advocates
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe