Skip to main content

80 ஆயிரம் வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

 

 

தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ‘’ சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை,  மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளதை எதிர்க்கிறோம்.  

 

 

நீதிபதி தஹில் ரமானியை சென்னையிலேயே பணியாற்ற உத்தரவிட வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரி நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் நாளை(10.9.2019) நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.  இந்த போராட்டத்தில் 80 ஆயிரம் வழக்கறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.’’என்று தெரிவித்துள்ளார்.

 

a

 

சார்ந்த செய்திகள்

Next Story

உரிய மருத்துவம் அளிக்கவில்லை.. அரசு மருத்துவமனை முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Not providing proper medicine.. Lawyers struggle in front of government hospital

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாரத்பாபு. இவர், ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 22.ந் தேதி முதுகு வலி காரணமாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக உரிய மருத்துவம் அளிக்காமல் பணியிலிருந்த மருத்துவர் பிரவீன்குமார், உடன் இருந்த உறவினர்களுக்கு எந்தவித நோய் குறித்த தகவலையும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.  

இந்நிலையில், 5 நாட்களுக்கு பிறகு கடந்த 29.ந் தேதி பணியிலிருந்த மருத்துவர், வழக்கறிஞரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற சில மணி நேரத்தில் வழக்கறிஞர் பாரத்பாபு உயிரிழந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ஆம்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு நான்கு நாட்களாக உரிய மருத்துவம் அளிக்காமல் உறவினர்களுக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் அலைக்கழித்து வந்த மருத்துவர் பிரவின்குமாரை கண்டித்து அவரை கைது செய்யக் கோரி அரசு மருத்துவமனை முன்பு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Not providing proper medicine.. Lawyers struggle in front of government hospital

பின்னர் அங்கு வந்த காவல்துறையினரிடம் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக மருத்துவ அலுவலரிடம் புகார் அளிக்க சென்ற போது, அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் இல்லாததால் மருத்துவ அலுவலர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் வந்த பணி மருத்துவர் யோகேஸ்வரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கு முறையான பதில் அளிக்காததால் அங்குப் பணி மருத்துவரிடம்  வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Not providing proper medicine.. Lawyers struggle in front of government hospital

இது தொடர்பாக வழக்கறிஞர் மதிவண்ணன், அரசு மருத்துவமனையில் சாதாரண முதுகு வலிக்காக சேர்க்கப்பட்ட வழக்கறிஞருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் நான்கு நாட்களாக காலம் தாழ்த்தி உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் பிரவீன்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் எனவும், அரசு மருத்துவமனைகளில் தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடு எந்த நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய  அவர் வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பாமர மக்களுக்கு எந்த அளவில் மருத்துவம் பார்ப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.

Next Story

நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு; வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

Central government intervention in judiciary; Bar association protest

 

நீதித்துறையில் ஒன்றிய அரசின் தலையீட்டை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

நீதித்துறையில் ஜனநாயகம் நிலவவும், மத்திய அரசு தலையிடக்கூடாது எனவும், நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும் வலியுறுத்தி நேற்று (30.1.2022) வழக்கறிஞர் சங்கத்தின் (DAA) சார்பாக உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுதந்திரமான முறையில், ஜனநாயக அமைப்பாக நீதித்துறை செயல்பட வேண்டும் என கோசம் எழுப்பப்பட்டது. 

 

அதைத் தொடர்ந்து, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அனைவரும் அச்சமற்ற, சுதந்திரமான வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஜனநாயகப் பூர்வமான நீதித்துறை செயல்பாடு வேண்டும் எனவும், மத்திய அரசு இதில் தலையிடக்கூடாது எனவும், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்தும், கண்டன உரையாற்றினார்கள்.

 

இதில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கு.பாரதி, DAA மாநில பொருளாளர் வழக்கறிஞர் சங்கர் உட்பட வழக்கறிஞர்களும், ஜனநாயக முற்போக்கு இடதுசாரி வழக்கறிஞர் சங்கங்களை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மதநல்லிணக்கத்திற்காக குரல் கொடுத்த மதவெறியர் நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.