Skip to main content

குடியிரிமை சட்டத்திற்கு எதிரான மனிதசங்கிலி போராட்டத்தின் ஆலோசனை கூட்டம்!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

மக்கள் விரோத அரசாக செயல்படும் பாஜக கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சிதம்பரத்தில் வரும் 30-ந்தேதி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. 

 

human chain


போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து சிதம்பரம் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி தலைமை வகித்தார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முண்ணனியின் மாநில செயலாளர் வாஞ்சிநாதன், சிபிஎம் மாவட்டக்குழு முத்து, தமிழக காங் கட்சியின் சார்பில் நகர செயலாளர் பாலதண்டாயுதம், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செய்திதொடர்பாளர் திருவரசு, இஸ்லாமிய அமைப்புகள், பொதுநல அமைப்புகள் என அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எடப்பாடி பழனிசாமியின் மனித சங்கிலி போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

தமிழ்நாட்டில் போதை பொருட்களை தடுக்க வலியுறுத்தி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில், எடப்பாடி பழனிசாமி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டார்.

Next Story

வடமாநில வியாபாரிகளுக்கு எதிராக மனிதச் சங்கிலி பேரணி (படங்கள்) 

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

சமீப காலமாக வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களாகவும், வியாபாரிகளாகவும் தொடர்ந்து தமிழகத்திற்கு வட மாநிலத்தவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில்  சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வட மாநில வியாபாரிகள் அதிக அளவில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் தமிழக வியாபாரிகள் தொழில் ரீதியாகப் பெருமளவில் பாதிக்கப்படுவதாகக் கூறி இதனைக் கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டை சுற்றுவட்டார வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் இன்று (14.01.2023) காலை 10 மணி அளவில் மனிதச் சங்கிலி பேரணியில் ஈடுபட்டனர்.