மக்கள் விரோத அரசாக செயல்படும் பாஜக கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சிதம்பரத்தில் வரும் 30-ந்தேதி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

Advertisment

human chain

போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து சிதம்பரம் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி தலைமை வகித்தார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் மாநில செயலாளர் வாஞ்சிநாதன், சிபிஎம் மாவட்டக்குழு முத்து, தமிழக காங் கட்சியின் சார்பில் நகர செயலாளர் பாலதண்டாயுதம், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செய்திதொடர்பாளர் திருவரசு, இஸ்லாமிய அமைப்புகள், பொதுநல அமைப்புகள் என அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.