Skip to main content

கொள்ளிடத்தில் உப்பு நீர் புகாதவாறு தடுப்பணை கட்டுவது குறித்த ஆலோசனை கூட்டம்

Published on 04/03/2018 | Edited on 04/03/2018
vallampadugai

 

கடலூர் மாவட்டம் வல்லம்படுகையில் கொள்ளிடம் ஆற்றில் உப்பு தண்ணீர் புகாதவாறு தடுப்பணை கட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கடலூர் மற்றும் நாகை மாவட்ட கொள்ளிட கரையோர கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள், சிதம்பரம் வர்த்தகசங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிதம்பரம் நகராட்சி முன்னாள் தலைவர் சந்திரபாண்டியன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன்,  விவசாய சங்கங்களின் கூட்டியக்கங்களின் செயலாளர் ரவீந்திரன், சிதம்பரம் வர்த்தக சங்க தலைவர் சதீஷ், கொள்ளிடம் கிருஷ்ணன், நடுத்திட்டு ஜெகசண்முகம், பழையநல்லூர் சீனுவாசன், திட்டுக்காட்டூர் பாரதி, ரோட்டரி சங்க ரவிச்சந்திரன், வடக்குமாங்குடி நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொள்ளிடம் ஆற்றில் உப்பு தண்ணீர் புந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும், இது வாழ்வாதாரப்பிரச்சினை என்றும், தடுப்பணை கட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினார்கள். இந்த கூட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

வெள்ளிடம் ஆற்றில் உப்பு தண்ணீர் உள்ளே புகாமல் இருக்க அளக்குடிக்கும் கரைமேடு கிராமத்துக்கும் இடையே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தடுப்பணை கட்டுவது குறித்து இருமாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது. காட்டுமன்னார்கோவில் அருகே  கொள்ளிடம் ஆற்றில் ம. ஆதனூர்- குமராமங்கலம் இடையே கதவணை திட்டத்தை அரசு உடனே துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை  திட்டத்தை அரசு வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும், மேலும் கொள்ளிடம் ஆற்றில் கதவணைப் பணிகளை உடனே துவக்கிட வேண்டும். இல்லை என்றால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

-அ. காளிதாஸ்

சார்ந்த செய்திகள்

Next Story

‘அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
High Court takes action for Cancellation of the case filed by the ed 

சென்னையில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப் ஸ்பேஷஸ் என்ற நிறுவனத்தை எஸ்.பி. பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து தொடங்கி நடத்தி வந்தனர். அதன் பின்னர் தொழிலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இத்தகைய சூழலில் நிறுவனத்தில் இருந்து தனக்கு சேர வேண்டிய பங்கை எஸ்.பி. பீட்டர் தர மறுப்பதாக கூறி ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் எஸ்.பி. பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என எஸ்.பி. பீட்டரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அதனை தொடர்ந்து சுமார் ரூ. 50 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு எஸ்.பி. பீட்டருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பபட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி. பீட்டர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்சனையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு. அமலாக்கத்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பித் தர அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தனர்.

High Court takes action for Cancellation of the case filed by the ed 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தரமோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (05.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. எஸ். ராமன் வாதிடுகையில், “நிறுவனத்திற்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது” எனத் தெரிவித்து உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். இதனையடுத்து அமலாக்கத்துறை சார்பில், “மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக் கோரி மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள்,“ மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது. எனவே அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் அமலாக்கத்துறையின் சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களை நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.