Advertisment

திருமாவளவனுக்கு டாக்டர்கள் சொன்ன அட்வைஸ்!

ட்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள மறைந்த அனிதாவின் இல்லத்தில் அவரின் நினைவு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, அருகில் உள்ள தனது சொந்த ஊரான அங்கனூரில் இரவு தங்கினார். விடியற்காலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பங்கேற்க அங்கனூரில் இருந்து புறப்பட்டார். திண்டிவனத்தில் காலையில் டிபன் சாப்பிட்டார். அங்கே ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் புதியவன் மகிழினி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அங்கிருந்து கீழ் எடையாளம் கிராமத்திற்கு சென்றார். அப்பகுதி மாவட்ட செயலாளர் ஆற்றல் அரசு பனை விதைகளை ஊன்றுவதற்காக அழைத்துச்சென்றார். அங்கே திருமாவளவனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் இதைக்கேள்விப்பட்டதும் உடனே விக்கிரவாண்டிக்கு வரச்சொன்னார். அதன்படி விக்கிரவாண்டி சென்ற திருமாளவனுக்கு அங்கே இருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார் திருமாவளவன்.

Advertisment

ட்

பரிசோதனைக்கு பின்னர், நேரத்துக்கு சாப்பிடுங்க, நேரத்துக்கு தூங்கணும், நல்லா ஓய்வு எடுங்க என்று மருத்துவர்கள் திருமாவளவனுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து இரவு 8 மணிக்கு மேல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். இந்நிலையில் இன்று மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Doctors Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe