adventure in road runoff?

Advertisment

விருதுநகர் மாவட்டம் - வத்திராயிருப்பு சுற்று வட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

தமிழகத்தில் வளிமண்டல கீழடிக்குசுழற்சியின் காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டமாகவே இருந்தது. திடீரென வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், கோபாலபுரம், பிளவக்கல் அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து, சாலைகளில் நீர் பெருக்கெடுத்தோடியது.

Advertisment

இந்த கனமழையால் போதை வாலிபர் ஒருவர் குஷியானார். மதுபோதையில் இருந்த அவர், வத்திராயிருப்பு சாலையில் ஓடிய மழை நீரில் அந்தர்பல்டி அடித்து, உற்சாகத்தை மேலும் வரவழைத்துக்கொண்டார். அந்த பல்டியை எப்படித்தான் அவருடைய முதுகும் உடம்பும் தாங்கியதோ தெரியவில்லை. அசராமல் எழுந்து நடந்தார்.

எல்லோர்க்கும் பெய்யும் மழை என வள்ளுவர் உரைத்தது இதற்கும் பொருந்துகிறதே!