Advertisment

ரயில் படியில் தொங்கி சாகசம்; கல்லூரி மாணவன் படுகாயம்

 Adventure hanging from train steps; College student injured

Advertisment

சென்னை ராயபுரத்தில் ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த 16 வயது சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆபத்தையும் உணராமல் சில மாணவர்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் படிக்கட்டில் தொங்கிய படியும் சாகசங்களில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ் வீடியோ எடுத்த பொழுது மின் கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்துள்ளார். விசாரணையில் அந்த மாணவர் பாரிஸில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது. ராயபுரத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை ரயிலில் பயணித்த சிறுவன் இந்த விபரீதத்தில் ஈடுபட்ட நிலையில் படுகாயமடைந்த சிறுவன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

school Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe