





Published on 17/12/2021 | Edited on 17/12/2021
திமுக தலைமையிலான அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் இன்று (17.12.2021) அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதேபோல், கடந்த தேர்தலில் மக்களுக்குத் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.