Advertisment

ஆளும்கட்சி எம்.எல்.ஏ. கடிதம்! -நகராட்சி நிர்வாக ஆணையர் நடுக்கம்!

p

திருச்செங்கோடு (அதிமுக) சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் பொன்.சரஸ்வதியின் கடிதத்தைப் படிக்கப்பட்டவையாகக் குறிப்பிட்டு, திருச்செங்கோடு நகராட்சி நிர்வாக நலன் கருதி, சேலம் மண்டல அலகு, திருச்செங்கோடு நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களான, அலுவலக உதவியாளர், வருவாய் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர், வருவாய் ஆய்வாளர், கணக்கர் என 6 பேரை, ராசிபுரம், கொமாரபாளையம், ஆத்தூர், மேட்டூர், இராசிபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய 6 நகராட்சிகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் நகராட்சி நிர்வாக ஆணையர்.

Advertisment

k

அந்தப் பணியிட மாறுதல் உத்தரவை நம்மிடம் காட்டிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்ணன் “நகராட்சி ஊழியர்களின் நிலைமையைப் பாருங்களேன்! ஆளும் கட்சி எம்.எல்.ஏ. என்றால் நடுக்கமா? எம்.எல்.ஏ. சொன்னால் எதுவும் செய்வாரா நகராட்சி நிர்வாக ஆணையர்? காலக் கொடுமை சார் இது!” என்று நம்மிடம் வேதனைப்பட்டார்.

Advertisment

le

rasipuram viruthunagar admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe