Advertisment

விஜயபாஸ்கர் பக்கத்தில் இருக்கும்போதே ‘குட்கா புகழ் அமைச்சர்’என்று பேசிய பிரேமலதா- கூட்டத்தில் சலசலப்பு

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வருவார் பேசமாட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் பிரேமலதா சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று திருச்சி தொகுதியில் உள்ள புதுக்கோட்டையில் தேமுதிக வேட்பாளர் வி.இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்து புதுக்கோட்டையில் பிரேமலதா பேசினார். அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தயது.

Advertisment

g

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ராணுவத்தில் அதிகமானோர் இருப்பது பெருமைக்குரியது. இந்த மாவட்டத்தில் தான் அதிகமான ஏரி,குளங்கள் உள்ளது. ஆனால் அதில் தண்ணீர் இல்லை. அதனால் மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்.

Advertisment

கந்தர்வக்கோட்டையில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படுவதுடன் புதுக்கோட்டையில போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக சுற்றுவட்டச் சாலையும், புதிய மேம்பாலங்களும் அமைக்கப்படும்.

சிப்காட் பகுதியில புதிய தொழிற்சாலை அமைத்து வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன் புதுக்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

புதுக்கோட்டையில் உள்ள புதுக்குளத்தை மீண்டும் படகு போக்குவரத்து வசதியுடன் மேம்படுத்தப்படும். மாநில அரசும், மத்திய அரசும் இந்தக் கூட்டணியில்தான உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் இந்தக் கூட்டணியே வெற்றி பெறும்.இந்தக் கூட்டணி மக்களுக்கு என்னென்ன செய்யும் என்று வாக்குறுதி அளித்து வருகிறது. ஆனால், ஸ்டாலின் எப்போதும் குறை சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

குட்கா புகழ் அமைச்சர் என்று விஜயபாஸ்கரை ஸ்டாலின் சொல்கிறார் என்ற போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதைப் பார்த்து, ஸ்டாலின் அப்படி சொல்கிறார் என்றார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் அதே வேனில் இருந்தார். அதனால் 'குறை சொல்வதில் புகழ்பெற்ற ஸ்டாலின்' என்று பட்டம் கொடுப்போம். பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்று சொல்லி வாக்குசேகரிக்கிறோம். ஆனால், அந்தக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களால் உறுதியாக கூறமுடியுமா?

புல்வாமா தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியும், ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தும் அளவுக்கு நம் நாடு ராணுவ வலிமையோடு உள்ளது பிரதமரின் சாதனையாகும்.

சாதிக்பாட்ஷா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் யார் என்று ஸ்டாலின் சொல்லிவிட்டு கொடநாடு கொலைகளில் அண்ணன் எடப்பாடியை சம்மந்தப்படுத்தி அவர் பேசட்டும். அதிகமான இளைஞர்கள், அதிகமான பெண்கள், உழைப்பவர்களைக் கொண்டுள்ளது இந்தக் கூட்டணி. ஆனால், அது ஊழல் செய்வதிலும் ஏமாற்றுவதிலும்தான் வலிமையான கூட்டணி.

2011-ல் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சேர்ந்து அமைக்கப்பட்ட அதே கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. எதிர்த்து போட்டியிடுவோரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இத்தேர்தலில் எனது பிரச்சார பயணத்தில் இதுவரை கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கே வாக்கு சேகரித்துவிட்டு இன்றுதான் முரசு சின்னத்தில் வாக்கு சேகரிக்கிறேன்.

கேப்டன் நன்றாக இருக்கிறார். உங்களை விசாரித்ததாக சொல்ல சொன்னார். லைவ் டெலிகாஸ்ட் பார்த்துக் கொண்டு இருக்கிறார். வெகு விரைவில் மக்களை சந்திப்பார் என்றார்.

admk dmdk Premalatha puthukottai vijayabaskar vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe