Advertisment

திமுகவை கண்டித்து மா.செ., பரஞ்சோதி தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

ADMK struggle led by PS Paranjothi condemning DMK!

Advertisment

சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக்கூறும் அதிமுக, அதனைக் கண்டிக்கும் வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் தில்லைநகர் அலுவலகம் முன்பு புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கு.பா.கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வடக்கு மாவட்டத்தைச் சார்ந்த மாநகராட்சி பகுதி, நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நிர்வாகிகள், அதிமுக செயல்வீரர்கள், தங்கள் வீடுகளின் முன்பு கண்டன முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

admk thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe