Seloor Raju

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக கூட்டணி எவ்வளவு பெரிய கட்சிகளை சேர்ந்த கூட்டணியாக இருந்தாலும் அது எங்களுக்கு பொருட்டே இல்லை எனக் கூறினார்.

Advertisment

இதுபற்றி அவர் கூறுகையில்,

திமுக கூட்டணி எவ்வளவு பெரிய கூட்டணியாக வந்தாலும் அதை சந்திக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தயாராக உள்ளது. திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் பங்குபெறும் என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை, நாங்கள் யாரும் கட்சி கூட்டணியை எந்த கட்சி பெரியது, எது சிறியது என்று பார்த்து நிற்கவில்லை. நாங்கள் மக்களை தான் நம்பி நிற்கிறோம்.

அம்மா எப்படி மக்களிடம் கூட்டணி வைத்திருந்தாரோ அதேபோல் அம்மாவின் அரசை நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மக்கள்தான் எங்களுக்கு கூட்டணி என்று உறுதிப்படுத்துவார்கள். எனவே எங்களுக்கு எந்த கூட்டணியும், எவ்வளவு பெரிய கூட்டணி வந்தாலும் நாங்கள் அதை பெரிதுபடுத்தவும் இல்லை, கவலைப்படுவதும் இல்லை என்றார்.

Advertisment