ADVERTISEMENT

சிறையில் இருந்து வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி!

08:06 AM Jan 13, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ஜாமினில் வெளியே வந்துள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான அவர், கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால், அவரை கைது செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், ராஜேந்திர பாலாஜி மீது நேரடியாக எந்த இடத்திலும் குற்றச்சாட்டு இல்லாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதால், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்றும், அவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார்கள் ஜோடிக்கப்பட்டவை என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதோடு பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க நீதிபதிகள் நிபந்தனை விதித்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி மத்திய சிறையிலிருந்து தற்பொழுது ஜாமீனில் ராஜேந்திர பாலாஜி வெளியே வந்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT