பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை நேரில் சந்தித்துப் பேசினார். டெல்லியில் நடைபெற்ற இச்சந்திப்பில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதற்கு தம்பிதுரை வாழ்த்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க முயன்றதாகவும், ஆனால் அந்த சந்திப்பு நிகழவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த தம்பிதுரை எம்.பி. பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.