
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மேல்முறையீடு வழக்கில் விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில்கடந்த 2 ஆம் தேதி நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்ராமன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், 'கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும்' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பிற்கும் எடப்பாடி தரப்பிற்கும் இடையே தொடர்ந்து பேட்டிகள் வாயிலாக முற்றல் மோதல்கள் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்துப் பேசியுள்ளார். அவர் பேசுகையில், ''எங்கள் அண்ணன் பொன்னையன் பேசியிருக்கார். அவரோட அப்பாவும் நானும் க்ளாஸ்மேட். என் பையனோட ஆறு வயசு சின்னவன். காலைலயே சி.வி.சண்முகம் குடிக்க ஆரம்பிச்சுடுவான். அப்பிடின்னு பொன்னையனே உனக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்காரு. ஒரு நாளைக்கு படத்தை வெச்சு பூ போட்டு இருப்பீங்களா? ஒரு நாளைக்கு ஜெயலலிதாவின் புகழை சொல்லிருப்பீங்களா? இன்னொரு உண்மையையும் சொல்கிறேன் நான். சத்யா ஸ்டுடியோவை நிர்வகிக்கும் குமார் எடப்பாடி ஆட்சியில் இருக்கும்பொழுது ஜானகி அம்மாவுக்கு விழா எடுக்க வேண்டும் என மனுகொடுத்தார். நான் செய்கிறேன் அப்பிடின்னு சொல்லிட்டு உடைப்பில் போட்டுட்டாங்க. கொள்ளையடிச்சுட்டோம், கொள்ளையடிச்சுட்டோம்னு சொல்றிங்க என்ன கொள்ளையடிச்சுட்டோம் நாங்க'' என்றார்.