Skip to main content

முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட அதிமுக நபர் - அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

Published on 18/03/2022 | Edited on 18/03/2022

 

ADMK person who posted a defamatory video about the Chief Minister! Police take action!ADMK person who posted a defamatory video about the Chief Minister! Police take action!ADMK person who posted a defamatory video about the Chief Minister! Police take action!

 

தமிழக முதல்வரைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடி முகநூலில் வீடியோவாக வெளியிட்டவர் மீது புகார் அளித்த அரை மணி நேரத்தில் அந்த நபரைக் கைது செய்து விசாரனை நடத்திவருகிறது நாகை போலீஸ்.

 

நாகப்பட்டினம் அடுத்துள்ள கீச்சாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி. அதிமுகவைச் சேர்ந்த இவர் சமூக வலைதளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடியதோடு அதனை அவரது முகநூல் பக்கத்தில் வீடியோக்களாகப் பதிவு செய்துள்ளார். 

 

முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை மோசமான வார்த்தைகளால் வசைபாடியதோடு, இந்து கோவிலுக்குச் செல்லும் திமுகவினரின் குடும்பத்தினரையும் தரம் தாழ்த்தி பேசியுள்ளார். இந்த வீடியோக்களை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அதிக அளவிலும் பரப்பிவிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நாகை மாவட்ட திமுகவினர் கொதிப்படைந்தனர். 

 

ADMK person who posted a defamatory video about the Chief Minister! Police take action!

 

இதையடுத்து, அக்கரைப்பேட்டை திமுக கிளைச் செயலாளர் சோமு என்பவர் கிருஷ்ணமூர்த்தியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நேற்று நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நகர காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேவாபாரதி பகுதியில் ஒளிந்திருந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். 


தமிழக முதல்வர் உள்ளிட்ட திமுகவினரை முகநூலில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வீடியோவாக பதிவு செய்த அதிமுக நபரை அதிரடியாய் கைது செய்து, விசாரணை நடத்திவரும் சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்