ADMK for the people of Madurai. Treason committed; Parliamentary documents are the witness-in-chief record

மதுரையில் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதித்தற்கு எதிராக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது திமுக அரசு. தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது, திமுக அரசு மீது குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதற்கு முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பதிலடி தந்தனர்.

இந்தநிலையில்,"பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது!" என்று நாடாளுமன்றத்தில் அதிமுக செய்த துரோகத்தை அம்பலப்படுத்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஸ்டாலின். அதில், "மதுரை Tungsten விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” என தம்பிதுரை அவர்கள் மழுப்பி இருக்கிறார்.

அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது. டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார்.

Advertisment

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.

அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை? மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

Advertisment