பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை (09/01/2021) காலை நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்திருந்தது.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு நாளை (09/01/2021) மாலை 04.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இருவரும் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். இதில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.