admk party meeting for today upcoming assembly election

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (21/11/2020) சென்னை வரவுள்ள நிலையில், அ.தி.மு.க. கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று (20/11/2020) நடைபெறுகிறது.

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 04.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

Advertisment

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்றவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் கூறுகின்றன.