Skip to main content

அ.தி.மு.க. பொதுக்குழு எப்போது?- இன்று மாலை ஆலோசனை! 

 

admk party meeting for today

அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். தலைமையில் இன்று (20/12/2020) மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (20/12/2020) மாலை 06.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 

 

இந்த ஆலோசனையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் பொதுக்குழுவை கூட்டுவது, சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம், தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடக்கும் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.