/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kc13222.jpg)
அ.தி.மு.க.வில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் பதவிகள் கலைக்கப்பட்டன. அதேபோல் மண்டலம் வாரியாக தகவல் தொழில்நுட்ப அணிக்கு என நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு, அதிமுகவில் ஐ.டி பிரிவை வலிமைப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வேலூர் மேற்கு (வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள்) மாவட்டத்தில் உள்ள கட்சி கிளையிலும் கிளை செயலாளர்களை போல் கிளை ஐ.டி செயலாளர் என்கிற பதவியை உருவாக்க அதிமுக முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு கிளையிலும் யாரை நிர்வாகியாக போடலாம், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஐடி பிரிவுக்கென நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பேரூராட்சியிலும் ஐடி பிரிவுக்கென நிர்வாகிகள் நியமனம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2020-07-04 at 15.29.02.jpg)
வேலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜனனி சதீஷ்குமார் மூலம் மனுக்கள் வாங்கும் படலம் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜூன் 4- ஆம் தேதி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் கிளை, ஒன்றியம், நகரம், பேரூராட்சிகளில் உள்ள கிளை, ஒன்றிய, பேரூர் கழக ஐடி பிரிவுக்கு யார், யாரை நிர்வாகிகளாக போடலாம் என்பது குறித்து ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்களிடம் அமைச்சர் வீரமணி ஆலோசனை நடத்தினார். அதோடு, அவர்கள் தந்த பட்டியலையும் வாங்கியுள்ளார்.
அணைக்கட்டில் ஒன்றிய செயலாளர் வேலழகன் தந்த பட்டியலை வாங்கிக்கொண்டார். அத்துடன் புதியதாக மனு தருபவர்கள் தரலாம் எனச்சொல்லி மனுக்கள் வழங்கவும் செய்தனர். இதில் தங்களது ஆட்களை நியமனம் செய்துவிட வேண்டும்மென ஒவ்வொரு நகர, ஒன்றிய செயலாளர்களும் முட்டி மோதிவருகின்றனர்.
Follow Us